Thursday 17 December 2015

செட்டிலாகிவிட்டோம் என்று தேங்காமல் ரிஸ்க் எடுங்கள்: மாணவர்களுக்கு சுந்தர் பிச்சை டிப்ஸ...

டெல்லி: டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இன்று, மாணவர்களோடு சந்திப்பு நிகழ்த்தினார். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை அளித்த பதில்: எனக்கு கிரிக்கெட்டும், கால்பந்தாட்டமும் பிடிக்கும். ஆனால் டி20 போட்டிகளைவிட ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளையே விரும்புகிறேன். கூகுள் சி.இ.ஓவாக பதவி வகிக்காவிட்டால் நான் சாப்ட்வேர் டெவலப் செய்யும் வேலையில்தான் இருந்திருப்பேன். உங்களை யார் உத்வேகப்படுத்துகிறார்களோ, அவர்களுடனேயே எப்போதும் கலந்திருங்கள் என்பதை மாணவர்களுக்கான அறிவுரையாக கூற விரும்புகிறேன். ஒரு செயலை செய்யும்போது ரொம்ப வசதியாக உணர்ந்தீர்களானால், நீங்கள் உங்களை தேக்கி வைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். பாதுகாப்பற்ற நிலையிலேயே உங்கள் பணிச்சூழல் இருக்க வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும். இந்தியாவில் இப்போது ரிஸ்க் எடுத்து தொழில் செய்யும் மனநிலை வந்துள்ளது. சிலிக்கான் வேலி தொழில்முனைவோருக்கும், இந்திய தொழில்முனைவோருக்கும் வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. இந்தியாவில் டீக்கடைகளில் கூட தொழில்முனைவோரை பார்க்க முடியும். சாப்ட்வேர் துறையின் ரத்த நரம்பு, டெவலப்பர்கள்தான். அதிகப்படியான டெவலப்பர்களை கொண்டிருந்தால், அதிகப்படியான பிரச்சினைகளை சமாளிக்கலாம். நமது மாணவர்களுக்கு ரிஸ்க் எடுப்பதன் அவசியத்தை சொல்லி கொடுக்க வேண்டும். ஆண்ட்ராய்டு தயாரிப்பு ஒன்றுக்கு, இந்திய உணவுப்பொருள் பெயரை சூட்டலாமே என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆன்லைனில் ஒரு வாக்கெடுப்பை நடத்தி உணவு பண்டத்தின் பெயரை வைத்துவிடலாம் (சிரிப்பு). நான் 1995ல் முதல்முறையாக போன் வாங்கினேன். 2006ல்தான் ஸ்மார்ட் போன் வாங்கினேன். தற்போது வீட்டில் 20-30 ஸ்மார்ட் போன்கள் உள்ளன. கூகுளின் அனைத்து சேவைகளையும் இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியை கிரிககெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தொகுத்து வழங்கினார்.

Wednesday 16 December 2015

இண்டர்நெட் இல்லாமல் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி.??

அதிவேக நெட் இணைப்பு இல்லாவிட்டால் கூகுள் மேப்ஸ்ஐ பயன்படுத்த முடியாது என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றி கொள்ளுங்கள்.

தெரியாத ஊரில் வழி தெரியாமல் மாட்டி கொண்டால் எப்படி வெளியே வருவது என்றால் முதலில் நினைவுக்கு வருவது கூகுள் மேப்தான். போனில் இண்டர்நெட்இருந்தால் தப்பிக்கலாம், ஒரு வேளை இண்டர்நெட் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து இருப்பீர்கள்.

இண்டர்நெட் இல்லாமல் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி என்பதை பாருங்கள்..

கூகுள் அக்கவுன்டு ஆப்ஷன்

முதலில் உங்கள் போனில் உள்ள கூகுள் அக்கவுன்டு ஆப்ஷன் (google account option) திறந்து லாக் இன் (log in) செய்யவும்.

ஓகே மேப்ஸ்

வெற்றிகரமாக பதிவு செய்தவுடன், ஓகே மேப்ஸ் (ok Maps) என்பதை ப்ரவுஸ் (browse) செய்து தேடவும்.

அப்டேட்

உங்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் மேப்பை நிறுவுவதற்கான ஆப்ஷனை பார்த்திருப்பீர்கள். அதை நிறுவி கொள்ளவும். முன்பே இந்த ஆப்ஸ் நிறுவப்பட்டிருந்தால் சமீபத்திய மேப்பை அப்டேட் செய்து கொள்ளவும்.

வைபை

இப்பொழுது உங்கள் டிவைஸில் ஆப்ஸ் நிறுவ தொடங்கியிருக்கும். இப்பொழுது உங்களிடம் வைபை இருந்தால் அதை பயன்படுத்தி நெட் பயன்பாட்டை பெற்று கொள்ள முடியும்.

யுவர் ப்ளேசஸ்

ஆப்ஸை நிறுவியவுடன் ஆப்ஸ் மெனு செல்லவும். அங்கே யுவர் ப்ளேசஸ் (Your places) என்று இருக்கும். அதன் மீது க்ளிக் செய்யவும். இதை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ செய்து (Zoom in or Zoom out) உங்கள் இடத்தை மேப்பில் தேர்ந்தெடுத்து கொள்ள முடியும்.

சேவ்

மேப்பில் ஏரியாவை தேர்ந்தெடுத்த பின் சேவ் பண்ணி விடுவது அவசியம். இடத்தை சேவ் செய்யும்பொழுது அந்த இடம் எந்த பகுதியில் இருக்கின்றது என்பதையும் சேமித்து கொள்ள வேண்டும்.

நெட்

உங்கள் போனில் உங்கள் சிட்டி முழுவதற்குமான மேப்பை சேமிக்க முடியும். இதனால் நெட் இல்லாத போதும் உங்கள் சிட்டியின் இடங்களை பற்றி அறிந்து கொள்ள முடியும்.


Thursday 10 December 2015

வெளிச்சத்திற்க்கு வந்த 'மறைக்கப்பட்ட' ரகசிய இடங்கள்..!

கூகுள் நிறுவனம் தனது மேப் சேவையை தொடங்கி 10 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் உலகில் உள்ள அனைத்து இடங்களும் கூகுள் மேப்பில் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

அதற்கு பல வகையான பாதுகாப்பு காரணங்கள் உண்டு. இருப்பினும் இதுநாள் வரை மறைக்கப்பட்டு வந்த சில குறிப்பிட்ட இடங்கள் மெல்ல மெல்ல வெளிச்சதிற்க்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவைகளில் சுவாரசியமான, மர்மமான மற்றும் சர்ச்சையான இடங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

01. ஸ்வாஸ்திக் :

'ஸ்வாஸ்திக்' வடிவில் கட்டமைக்கப்பட்டுள்ள கட்டிடம்.
இடம் : கோரோன்டோ, கலிபோர்னியா, அமெரிக்கா.
இதை காண இங்கே கிளிக் செய்யவும், பின் 'கூகுள் எர்த்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்...!

02. ஃபைர்ஃபாக்ஸ் :

சோள தோட்டத்தின் நடுவே பொறிக்கப்பட்டுள்ள ஃபைர்ஃபாக்ஸ் லோகோ (Firefox Logo)
இடம் : டேடன், ஓரிகன், அமெரிக்கா.
'கூகுள் ஏர்த'தில் இதை காண இங்கே கிளிக் செய்யவும்..!

03. வடிவமைப்பு :

இயற்கைக்கு மீறிய ஒரு வடிவமைப்பு (outlandish pattern)
இடம் : சீன பாலைவனம்.
'கூகுள் ஏர்த'தில் இதை காண இங்கே கிளிக் செய்யவும்..!

04. தோட்டம்

கிதார் போன்ற வடிவமைப்பில் உருவான தோட்டம்.
இடம் : கோர்டொபா, அர்ஜென்டீனா.
'கூகுள் ஏர்த'தில் இதை காண இங்கே கிளிக் செய்யவும்..!

05. கப்பல் :

பாதி மூழ்கியிறுக்கிற ஒரு கப்பல்.
இடம் : பார்ஷா, ஈராக்.
'கூகுள் ஏர்த'தில் இதை காண இங்கே கிளிக் செய்யவும்..!

06. வடிவமைப்பு :

மேலும் ஒரு இயற்கைக்கு புறம்பான வடிவமைப்பு.
இடம் : நேவேடா, அமெரிக்கா.
'கூகுள் ஏர்த'தில் இதை காண இங்கே கிளிக் செய்யவும்..!

07. சிங்கம் :

பெரிதாக்கப்பட்ட ஒரு பிரிட்டிஷ் சிங்கம்.
இடம் : டன்ஸ்டேபில்.
இதை காண இங்கே கிளிக் செய்யவும், பின் 'கூகுள் எர்த்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்...!

08. கல்லறை :

விமான கல்லறை என்று அழைக்கப்படும் விமான கிடங்கு.
இடம் : டஸ்கன், அரிஸோனா.
இதை காண இங்கே கிளிக் செய்யவும், பின் 'கூகுள் எர்த்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்...!

09. லோகோ :

ஒரு கட்டிடத்தின் மேல் மீது உள்ள பெரிய அளவிலான பேட்மேன் லோகோ.
இடம் : ஒகிநாவா, ஜப்பான்.
இதை காண இங்கே கிளிக் செய்யவும், பின் 'கூகுள் எர்த்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்...!

10. பாலைவன நினைவு :

யூடிஏ ஃப்லைட் 772 விமானத்தின் பாலைவன நினைவிடம்.
இடம் : சஹாரா பாலைவனம், தெற்கு தேனேரே ஆஃப் நைஜர்.
இதை காண இங்கே கிளிக் செய்யவும், பின் 'கூகுள் எர்த்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்...!